தமிழ் சினிமா டுடே சூலை 12 1999யில் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாடல் உலகில் வலம் வந்த திரிசா ஆரம்ப காலத்தில் தான் திரை உலகிற்கு வரமாட்டேன் என்று கூறினாலும், அதே ஆண்டு சிம்ரன் கதாநாயகியாக நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தோன்றினார்.
அதன் பிறகு அமீர் இயக்கத்தில் 2002யில் வந்து கலக்கிய மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், 50 படங்களுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள திரிஷா சிம்பு தொடங்கி ரஜினி வரை எல்லா முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
அபியும் நானும் , விண்ணைத்தாண்டி வருவாயா?, மங்காத்தா போன்ற படங்கள் வெற்றி படங்கள் மட்டுமின்றி அவருக்கு நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பைத்தந்த படங்கள் என்றேக் கூறலாம். 1999ல் நடிக்கத் தொடங்கி 2019ல் பேட்ட படத்தில் ரஜினி அவர்களுக்கு ஜோடியாக நடித்தது வரை கதாநாயகியாக 22 ஆண்டுகளாக கலக்கி வருகின்றார்.
தனது 38 வயதிலும் 22 ஆண்டுகளாக திரையுலகில் நிலைத்து கதாநாயகியாகவும் தென்னிந்திய திரையுலக ராணியாக வலம் வருவதற்கு அவரது உணவு முறையும், சரியான உடற்பயிற்சியும் தான் என்று கூறுகின்றார்கள்.
செய்தி தமிழ் சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/