தமிழ் சினிமா சூலை 04 இந்திய ஒன்றிய அரசு கல்வி, மதம் மாநிலம் என தனித்தனியாக பாதிக்கும் சட்டங்களை வரிசயைாக கடந்த ஏழு ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தது, இப்போது பேச்சுரிமையை நசுக்கும் விதமாக ஒளிப்பதிவு சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ஒன்றியத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு தணிக்கை குழு உண்டு, பின்பு இந்திய ஒன்றிய அரசின் தணிக்கை குழுவும் உள்ளது, இவை ஒரு அரசு சார்பற்ற குழு என்றுச் சொன்னாலும் பெரும்பாலும் ஆளும் கட்சிகளின் சார்பானவர்களே இருப்பார்கள்.
ஆளும் கட்சிகளின் சார்பானவர்கள் அவர்களது கட்சியை சாடுவது போல் இருந்தால் பல காரணங்கள் காட்டி அதனை தடுக்கவேச் செய்வார்கள், இப்போது வந்துள்ளச் சட்டம் தணிக்கையை தாண்டி வந்தாலும், அரசு எப்போது வேண்டுமானாலும் அதனை விலக்கி படத்திற்கு தடை விதிக்க முடியுமாம், இதனால் பல கோடி செலவு செய்து படம் எடுக்கும் இவர்களால் தணிக்கை பின்பு தடை இல்லை என்று நிம்மதியாக இருக்க முடியாது.

அதேப்போல நட்பு நாடுகளின் முரண்களை திரைப்படங்களில் பேச முடியாது, இதனால் ஆளும் கட்சியை பற்றிய விமர்சனம் என்பது முற்றிலும் முறியடித்து விடலாம், அதேப்போல புகழ்ந்து பேசும் படங்களை வெளியிட முடியும்.
இதனால் சமூகத்தை குறித்து உண்மையான விமர்சனங்கள் என்பது இல்லாது ஆளும் அரசை புகழும் அமைப்பாக மாறி விடும்.
இந்த புதிய சட்டத்திருத்ததை எதிர்த்து நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் போன்றோர் பேசி வருகின்றனர், ஆனால் வலது சாரி சிந்தனை உடைய நடிகர்கள் அரசியல்வாதிகள் வழக்கம் போல் இந்த இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்ததை வரவேற்கவேச் செய்கின்றன. சில படங்களில் வரும் போலி சண்டைக்காட்சி போல இவர்கள் எதிர்ப்பு இருக்குமா?, இல்லை உண்மையில் எதிர்த்து போராடி வெற்றி பெறுமா பொருத்திருந்து பார்ப்போம்.
செய்தி தமிழ்சினிமா டுடே
https://www.tamilcinema.today