தமிழ் சினிமா டுடே ஆக 02 கோலிவுட் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் ஒ.டி.டி தளத்தில் கலக்கி வரும் சார்பட்டா இந்த ஆண்டின் சிறந்த படங்களில் முன்னனி என்றேச் சொல்ல வேண்டும்.
சார்பட்டா திரைப்படத்திற்கு பின்பு தான் வடசென்னையில் இன்றைக்கும் அன்றைய காலக்கட்டத்தில் பங்கு கொண்ட பல குத்துச்சண்டை வீரர்களை சமூகம் அடையாளம் காணும் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது என்றுச் சொன்னால் மிகையில்லை.

அதேப்போல சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குத்துச்சண்டையின் மீது இருந்த திராத ஆர்வம், குத்துச்சண்டை வீரர்கள் ஒரு சினிமா பிரபலத்தை விட மிகவும் புகழ் பெற்றிருந்த நிலை போன்றவற்றை அறிய முடிகின்றது.
90களில் இந்த குத்துச்சண்டை தடமாறியதால் நிறுத்தப்பட்டதா? அல்லது வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதா? என்பது வேறு கேள்வி ஆனால் இந்த குத்துச் சண்டை தொடர்ந்திருக்குமானால் உலகச் சாம்பியன் ஒருவர் வட சென்னையிலிருந்து வந்திருப்பார் என்பதில் எந்த வித அய்யமும்மில்லை.

பா.ரஞ்சித் இதனை யாருடைய சுயசரிதையாகவும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை, ஆனால் அவர் அந்த 75 கால கட்டத்தில் குத்துச்சண்டை வடசென்னையில் எத்தனை உயிர்ப்புடன் இருந்தது.
அந்த குத்துசண்டை பரம்பரைகளின் நடை முறை அப்போது நிலவிய அரசியல் சமூகம் இதனை விளக்குவதுடன் இந்த குத்துச்சண்டையின் மேன்மையை பார்வையாளர்களுக்குச் சொல்லவே இந்த முயற்சியை செய்துள்ளார்.

இதில் இயக்குநர் பல்வேறு குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை பயன் படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குநர் யாருடைய தனிப்பட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சி செய்யவில்லை. வட சென்னையில் கொடிகட்டி பறந்த குத்துச்சண்டை விளையாட்டை மக்களுக்கு காட்ட முயற்சி செய்துள்ளார் என்பதே உண்மை.
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/