2009ல் வெண்ணிலா கபடிக் குழுவில் அறிமுகமான விஷ்ணு விசால், பெரும்பாலான அவரது படங்களில் நகைச்சுவையுடன் கூடிய நாயகனாகவே நடித்துள்ளார், அவரது குள்ளநரி கூட்டம் என்கின்ற சிறிய பட்ஜெட் படம் சிறப்பாக ஒடியது எனலாம்.

அதேப்போல் அவரது ப‍‍லேபாண்டியா, முண்டாசு பட்டி போன்ற படங்களும் அப்படியே அமைந்த படங்கள் தான், அவர் நடித்த நீர்ப்பற‍வை வித்தியாசமாக அமைந்ததுடன் விருதினையும் பெற்றுத் தந்தது, விஷ்ணு விசால் நடிப்பிற்கும் சிறந்த பாராட்டினை பெற்றுத்தந்தது.

அதன் பிறகு சுசிந்திரன் இயக்கத்தில் வந்த ஜிவா திரைப்படம் அவருக்கு ஒரு ரொமான்ஸ் மற்றும் பர்பாமன்ஸ் நாயகனாக உயர்த்தியது, இன்று நேற்று நாளை படமும் நகைச்சுவை படமாக சிறப்பாக அமைந்தது.

இப்போது எல்லா ஹிரோக்களும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து வைக்கும் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் காட்சி தந்துள்ளார், திரைப்படங்களை தேர்ந்து நடிக்கும் விஷ்ணு விசாலுக்கு புதிய கெட்டப்படம் சிறப்பாகவே அமையும்.

செய்தி டிவிட்டர் திருடன்