ஆகஸ்ட் 29 கோடம்பாக்கம் விஷால், ஹரி கூட்டணியில் ‍2007யில் வெளிவந்த ‘தாமிரபரணி’ திரைப்படம் இருவருக்கும் ஒரு ஹிட்டாக அமைந்தது, ஏழு ஆண்டுகள் கழித்து ‘பூஜை’ திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏறக்குறைய 10 ஆண்டு இடைவெளியில் விஷால் மற்றும் ஹரி இணைந்து பெயரிடாத ‘விஷால் 34’ என்று பெயரிட்டு தொடங்கியுள்ளது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், ஜீ ஸ்டு‍டியோவும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது.

இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டாலும், படத்தின் படபிடிப்பு இப்‍பொழுது தான் தொடங்கியுள்ளது, இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

விஷாலின் திரைப்படங்கள் அண்மையில் ஏதும் வெளிவராதச் சூழலில், விஷால் இப்போது மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 என வரிசையாக படங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார், அண்மைக்காலங்களில் பெரிய வெற்றிப்படங்கள் தராத சூழலில் விஷாலின் இனி வரும் படங்கள் வெற்றிப் பெற அவரது பிறந்தநாளில் தமிழ்சினிமா.டுடே வாழ்த்துகின்றது.

செய்தி கோடம்பாக்கம் கோவாலு.
தமிழ்சினிமா.டு‍டே