தமிழ்சினிமா டுடே சூலை 23, கோலிவுட் கும்கி திரைப்படத்தின் மூலம் கலக்களான வெற்றியின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு ஒரு சினிமா பராம்பரிய குடும்பத்திலிருந்து வந்தாலும், அந்த பெயரை வைத்துக் கொண்டு ஒ்ட்டுபவர் அல்ல.

தனது ஒன்பதாண்டுகள் திரை அனுபவத்தில் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் அவர் தந்திருந்தாலும், அதில் அவன் வேற மாதிரி, போன்ற ஒரிரு படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளன.

விக்ரம் பிரபு தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களில் எனோ தானோவென்று நடிப்பவரில்லை ஆனாலும் படங்கள் பெரிதாக போகாததற்கு அவரின் கதை தெரிவுகளென்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இயக்குநர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்றத் திரைப்படத்தில் விக்ரம் நடித்து வருகின்றார், இது இயக்குநர் தமிழுக்கு முதல் படமாகும். டாணா என்றால் போலிஸ் என்று பொருள்படுவதாகும்.

தமிழின் பெரும்பாலான நண்பர்கள் காவல்துறையில் உள்ளனராம் அவர்களது அநுபவங்களை கேட்டு அதனை கருவாகக் கொண்டு ஆனால் வேறுபட்ட வகையில் உருவாகி வரும் படம் தான் டாணாக்காரன் படமாம்.

இந்த திரைப்படம் காவலர் பயிற்சியின் போது நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார்.

விக்ரம் பிரபு எப்போதும் தனது 100 சதவீத திறமையையும் முயற்சியையும் வெளிப்படுத்தக்கூடியவர் தான், ஆனால் கதையும், திரைக்கதையும் சிறப்பாக அமைந்தால் வெற்றியாகவே அமையும்.

தமிழ் தனது முதல்படமான டாணாக்காரன் திரைப்படத்தில் அதற்காக அனைத்து வேலைகளையும் செய்திருப்பார் என்று நம்புவோம், வெற்றிக் கூட்டணியை விரைவில் சந்திப்போம்.

செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/