சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் திறமையான தயாரிப்பாளர்களில் கலைப்புலி தாணுவும் ஒருவர். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் விநியோகம், தயாரிப்பு என இயங்கி வருபவர். பல தோல்வி படங்களுக்குப் பின்னரும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இப்போதும் இயங்கி வருகிறார்.
இந்நிலையில் இப்போது இளம் நடிகர்களை தொடர்ச்சியாக தன் படங்களில் நடிக்க வைக்கும் தாணு, விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளார்.
அதில் ஒரு படத்தை சீனு ராமசாமி இயக்க உள்ளாராம். இது அவர்கள் இணையும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
செய்தி நாகராஜன் நிருபர்.