செப் 21 கோடம்பாக்கம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தோன்றும் வள்ளி மயில் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடைபெறுவதாக அதன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அழகர் சாமியின் குதிரை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த திரைப்படத்தினையும், ஜீவா என்கின்ற ஒரு அழகான ஆனால் சொல்ல பயப்படும் கதை மற்றும், ஜீனியஸ் என்கின்ற சொல்லத்தயங்கும் கதைகளை இயக்கி படமாக்கியவர் தான் சுசீந்திரன், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வள்ளி மயில்.
இத்திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, புரட்சி தமிழன் சத்யராஜ், ப்ரியா அப்துல்லா, தம்பி இராமையா, மனிஷா திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர், இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்துவரும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது, இயக்குநர் சுசீந்திரன் அது குறித்து தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுருந்ததை அறிவோம்.
இப்படத்தினை தாய் சரவணன் தயாரித்துள்ளார், ஒளிப்பதிவு விஜய் கே சக்கரவர்த்தியும் படத்தொகுப்பினை ஆண்டனியும் மேற்க்கொள்ள திரைப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கோடம்பாக்க வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டு திரைப்படம் நன்றாக இருந்த போதும் அதில் சிறிய சறுக்கலை சந்தித்த சுசீந்திரனுக்கு அவரது திறமைக்கேற்ற படம் ஒன்றும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும் வள்ளி மயில் ஒரு சிறந்த திரைப்படமாக அமைய தமிழ்சினிமா டுடேயின் வாழ்த்துகள்.
செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/