சூலை 19 கோடம்பாக்கம் இசையமைப்பாளராக திரையுலகில் புகுந்த விஜய் ஆண்டனி தனக்கென ஒரு இடத்தை திரைப்படத்திலும் இளைஞர் நடுவிலும் பெற்றப்பின்பு கதாநாயகனாக அறிமுகமாகி, மாபெரும் ஹிட் இல்லை என்றாலும் ரசிக்கக் கூடிய பெரும் தோல்வியில்லாத படங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
அந்த வகையில் அண்மையில் வெளிவரயிருக்கும் திரைப்படம் தான் கொலை, இந்த திரைப்படத்தில் ஒரு காவல் அதிகாரியாக வருவதாகச் செய்தி, கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றுகின்றார்.

பாலாஜி கே குமார் அவர்களின் இயக்கத்தில் சிவக்குமார் விஜயன் அவர்களின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள கொலையில், விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், ஜான் விஜய் கிஷோர் குமார், முரளி சர்மா,சித்தார்த்தா சங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே டிரெயிலர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்திய திரைப்படம் இந்த ஆண்டு சூலை 21 திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, திரைப்படம் வெற்றியடைய தமிழ்சினிமா டுடே வாழ்த்துகின்றது
செய்தி கோலிவுட்பாய்