நவம்பர் 7 இன்று இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள், கங்கை அமரனின் மகன் என்பதை விட இயக்குநர் வெங்கட் பிரபு என்று ரசிகர்களால எளிதில் அறியப்பட்டவர்.

‍சென்னை 600023, சரோஜா, கோவா போன்ற வித்தியாசமான திரைப்படங்களை படைத்ததோடு அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற மாஸ் திரைப்படத்தையும் தந்தவர் வெங்கட் பிரபு.

பழகுவதற்கு மிகவும் எளிமையும் இனிமையுமானவர் வெங்கட் பிரபு, இப்போது அவர் ஆந்தாலஜ் எனப்படும் கூட்டு குறும்படங்களின் தொகுப்பாய் வெளிவரும், VICTIM என்ற திரைப்படத்திற்கு ஒரு எபிசோட்டை வெங்கட் பிரபு இயக்குகின்றார், அவருக்கு தமிழ் டுடே மற்றும் கோலிவுட் டுடே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.