தமிழ் திரைப்பட நகைச்சுவை மன்னர்களின் வரிசைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் வடிவேல் அவர்களின் 60வது பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்வதில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பெருமை கொள்கிறது.

என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வலம் வரும் வடிவேல் அவர்கள் 12 செப் 1960 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவின் 23 ஆம் புலிகேசி தமிழ்ச் சினிமாவில் வருங்காலத்தில் நகைச்சுவை நடிப்பிற்கு ஒரு பாடமாகவே அமையும், வடிவேல் அவர்கள் இப்பொழுதெல்லாம் திரைப்படங்களில் அதிகமாக தோன்றவில்லையென்றாலும் அவர் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கருத்துக்களை வாரி வழங்கும் வள்ளல், அண்மையில் அவரது #நேசமணிக்கு என்னாச்சி ஹாஸ் டெக் உலகப்புகழ் பெற்றது.