தமிழ்சினிமா டுடே சூலை : நடிகர் பிரபுதேவா நடிக்க சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இதில் இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை தலைப்பு வைக்கவில்லையாம்.

சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு பெயர் வைக்கச்சொல்லித் தர வ‍ேண்டுமா? குறுக்குச் சந்துல்ல கும்மாங்குத்துன்னு கூட பேரை வைத்து படத்தை வெளியிடுவார் என்று திரைப்பட வட்டாரத்தில் சிரித்துக் கொண்டே சிலர் சொல்கின்றார்கள்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/