தமிழ்சினிமா டுடே சூலை 23: கோலிவுட் இந்த மாதம் 22ந்தேதி பெரிய எதிர்பார்ப்புடன் அமெசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் வெளிவந்த திரைப்படம் பா.ரஞ்சித்யின் சார்பட்டா.
இந்தப்படத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜயன், என்று பெரும் ஆண்கள் கூட்டத்தில் முதன்மையான வேடமேற்று நடித்த பெண்களில், கதாநாயகியாக நடித்தவர் தான் துஷாரா விஜயன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த துஷாரா விஜயன் தமிழை தங்கு தடையின்றி பேசுவது ரசிகர்களுக்கு ஆறுதல் என்பதை விட இயக்குநர்களுக்கு பலம் என்று தான் சொல்ல வேண்டும், ஒரு படத்தின் மொழி நன்றாக புரிந்து காட்சிகளை உள்வாங்கி நடித்தால் தான் காட்சி அமைப்பும் நன்றாக வரும்.
துஷாரா 2017 ஆம் ஆண்டு சென்னையில் மிஸ் பேஸ் மற்றும் அதே ஆண்டு அவர் மிஸ் தென்னிந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
துஷாரா அதன் பின் மாடலிங்கில் இந்திய அளவில் செயற்பட்டு வரும் நிலையில் 2019யில் போதை ஏறி புத்தி மாறி என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அந்த கால கட்டத்திலேயே துஷாரா சார்பட்டாவில் நடிக்கத் தொடங்கினாலும் கொரோனாவினால் படம் இரண்டாடுகள் கழித்தே வெளி வருகின்றது.
சார்பட்டாவில் துஷாரா ஏற்று நடித்துள்ள மாரியம்மா கதாபாத்திரம் ஒரு வலிமையான அந்த முழு படத்தின் ப்ரேமில் இவரது இடம் அந்தப்படத்தின் முழுமைக்கு பெரும் துணை செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ் திரையுலகில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகைகள் சில பத்தாண்டுகளாய் வெற்றி பெறுவது என்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும், துஷாரா, நடிப்போடு நல்ல புரிதலும் உடையவராக இருப்பதால். அவருக்கு தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்பை பெற்று வலம் வருவார் என்ற நம்பிக்கையுள்ளது.
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/