தி விக்டிம்(The Victim) என்கிற அந்தாலஜி எனப்படும் நான்கு குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக உருவாகி வருகின்றது.

குறும் படங்களை இணைத்து வெளியிடும் வேலையை பாலச்சந்தர் முன்பு இடைவேளைக்கு முன்னால் ஒன்று இடைவேளைக்கு பின்னால் ஒன்று என்று முன்னமே வெளியிட்டார், கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் மூலமாக இது போன்ற ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அண்மையில் ஹலிதா ஷமீம் இயக்கிய இது போன்ற ஆந்தாலஜ் படமான சில்லுக் கருப்பட்டி பெரும் வெற்றிக்கு பின்னர், வெங்கட் பிரபு, சிம்புத்தேவன், பா.ரஞ்சித், ராஜேஷ் எம் இணைந்து தி விக்டிம்(The Victim) என்கிற அந்தாலஜ் விதமான திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். வெங்கட் பிரபுவின் படங்களில் பணியாற்றியுள்ள பா.ரஞ்சித் எனது இயக்குநருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என டிவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.