சென்னை: மிக நீண்ட காலமாக கால தாமதமான மாநாடு திரைப்படம் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வேகமாக பணியாற்றி மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சிம்புவின் திரைப்பட வெளியீடுகளில் ஒரு சுனக்கம் இருந்தது, ஆனால் ஈஸ்வரன் படத்திலிருந்து அவரிடம் பெரிய மாற்றம் உள்ளது. இனி அவரது திரைப்படங்களை அதிகம் திரையில் காணலாம். வாழ்த்துக்கள் சிம்பு.

செய்தி நாகராஜன் நிருபர்