தமிழ்சினிமா டுடே சூலை 09 தனுஷ் பாடி வெளியான ஒய் திஸ் கொலை ‍வெறி பாடல் உலகப் புகழ் பெற்றது, அந்தப்பாடல் பெற்ற உலகப்புகழால், அன்றைய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களை சந்திப்பதற்கு தனுஷ்க்கு வாய்ப்பினயும் பெற்றார்.

அதன் பிறகு மெகா ஹிட் பெற்ற பாடல் ரெளடி பேபி பாடலைத்த தான் சொல்ல வேண்டும், அந்தப்பாடலுக்காக அவருக்கு யூ டியூப் வருமானம் மட்டுமே பல கோடிகள் கிடைத்ததாகவும் செய்திகள் வந்தன.

நடனத்தில் கலக்கும் சாய் பல்லவி மற்றும் தனுஷ் ஆடி வெளியான பாடல் தான் ரெளடி பேபி பாடல். கடினமான நடன அசைவுகளையும் எளிதாக ஆடக்கூடியவர் தான் சாய் பல்லவி, தனஷ்க்கு சொல்லவே வேண்டாம், இந்தப்பாடலின் நடன அசைவும் காட்சி அமைப்பும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

கொலை வெறி பாடலைப் போலவே ரெளடி பேபி பாடலும் உலகப் புகழ் பெற்றது. அதன் யூ டியூப் லைக் மட்டும் 5 மில்லியன் எட்டியுள்ளது என்று யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

செய்தி தமிழ்சினிமாடுடே நிருபர்.
https://www.tamilcinema.today/