கோடம்பாக்கம் செப் 02 : ஜெயம் ரவியின் ‘இறைவன்‘ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளி வருவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நிர்ணயித்த தேதியில் வரவில்லை.

‘வாமனன்’ . ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அஹமத், இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார், நாயன்தாரா ‘இறைவன்’ திரைப்படத்தின் நாயகியாக இணைந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இறைவன் உருவாகியுள்ளது.

‘இறைவன்’ திரைப்படத்தின் படபிடிப்பு பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படபிடிப்பு நடத்தப்பட்டு ‘இறைவன்’ திரைப்படத்தின் படபிடிப்பு சென்ற நவம்பர் 2022யில் முடிவுற்றது. திரைப்படம் ஜுலை 2023யில் வெளிவருவதாக அறிவித்த நிலையில் திரைப்படம் தள்ளிப்போனது.

‘பொன்னியின் செல்வன்’ ஜெயம் ரவிக்கு உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய வரவேற்பை தேடித்தந்தச் சூழலில், புதுமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ திரைப்படத்திலும், எம். ராஜேஷ் இயக்கத்தில் ‍ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

‘மாவீரன்’ திரைப்படத்துடன் ‘இறைவன்’ திரைப்படம் வெளிவரும் என்றுச் சொல்லப்பட்ட சூழலில் கொஞ்சம் தாமதமாக செப்டம்பரில் வெளி வரும் என்று திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர், ‘ இறைவன்’ வெற்றியடைய தமிழ்சினிமா.டுடே வாழ்த்துகின்றது.

செய்தி கோம்பாக்கம் கோவாலு.
தமிழ்சினிமா.டு‍டே