சூலை 20 கோடம்பாக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் அண்மையில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் தயாரிப்பாக லெட்ஸ் கெட் மேரேஜ்! என்ற தமிழ் திரைப்படம் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ளது.
லெட்ஸ் கெட் மேரேஜ் திரைப்படமானது இந்த மாதம் இறுதியில் சூலை 28யில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா தோன்றுகின்றனர்.

தோனி மற்றும் அவரது துணைவியார் இணைந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படம் சூலை 28 ஆம் தேதி வெளிவரும் என அலுவல் பூர்வமாக தோனி எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.
தல தோனி சி.எஸ்.கே விற்கு கப் அடிப்பது போல LGM திரைப்படமும் வெற்றி அடைய தமிழ்சினிமா டுடே வாழ்த்துகிறது.
செய்தி
கோ வாலு