செப் 21 கோடம்பாக்கம், தல அஜீத்குமாரின் நடிப்பில் வெளிவரவிருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. அஜீத் தனது இயல்பான சால்ட் அண்ட் பெப்பர் சிகையுடனே போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் சீடிவி, மற்றும் ‍போனிகபூர், சுரேஷ் சந்திரா போன்றோர் இணைகின்றனர். அஜீத் அவர்கள் இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்டில்ஸ் வ‍ெளியாகி வந்த சூழலில் அவரது துணிவு முதல் பார்வை வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.

திரைப்படம் வெளிவரும் தேதி மற்றும் படப்பிடிப்பு குறித்து விரைவில் செய்திகள் வெளிவரும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. அஜீத்குமார் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதில்லை, இதனால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்புள்ளது. திரைப்படம் வெற்றி பெற தமிழ்சினிமா டுடே வாழ்த்துகிறது.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/