தமிழ்சினிமா டுடே சூலை 19: சென்னை டெம்பிள் மங்கிஸ் என்கிற யூ டியூப்பால் தமிழ் உலகம் அறிந்தவர் என்பதை விட யூடியூப்பை தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் விஜய் வரதராஜ் குழுவினர் என்று தான் கூற வேண்டும்.

அவர்களது டெம்பிள் மங்கிஸ் வாடிக்கையான காணொளிகளிலிருந்து வேறுபட்டதோடு, இளைஞர்களுக்கும் விருப்பமானது என்றேச் சொல்லலாம். நிறைய சோதனை முயற்சிகளை அவர்கள் யூடியூப் காணொளி மூலம் செய்து பார்த்தவர்கள் தான்.

விஜய்வரதராஜ் இயக்கத்தில் தனது முதல் படமாக “பள்ளு படாம பாத்‍கோ” என்ற திரைப்படத்தை இயக்கி அது திரைக்கு வரும் நேரத்தில் கொரோனாத் தாக்கத்தால் படம் குறித்த நேரத்தில் வெளி வர முடியாமல் போனது.

“பள்ளு படாம பாத்‍கோ” திரைப்படம் டெல்லி சென்சார் வரைச் சென்று அதன் பிறகு அனுமதி பெற்று வந்த போதும் பெருந்தொற்றால் தாமதமானது, அந்தப்படத்தின் தலைப்பை வைத்து திரையுலகில் பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், விஜய்வரதராஜ்யின் படைப்புகளை ‍தொடர்ந்து கவனித்து வரும் தமிழ்சினிமா டுடே குழுவினர் அந்த திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு ஒரு வேறுபட்ட படைப்பாக இருக்கும் என்றேக் கூறினர்.

இந்நிலையில் விஜய் வரதராஜ் தனது இரண்டாவது படைப்பாக “குத்துக்கு பத்து” என்ற புதிய திரைப்பட பணியில் இறங்கியுள்ளார். இது போன்ற இயக்குநர்களின் படங்கள் வெளிவந்து வெற்றியடைந்தால் தானே வேறுபட்ட படைப்புகளை தமிழ் திரையுலகில் காண முடியும். அசராத உழைப்பாளி விஜய் வரதராஜ்யின் “குத்துக்கு பத்து” வெற்றியடைய தமிழ்சினிமா டுடே குழுவினர் வாழ்த்துகின்றனர்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/