தமிழ்சினிமா டுடே சூலை 23, கோலிவுட் நடிகர் சூர்யா அவர்கள் நடிகர் சிவக்குமார் அவர்களின் மகன், நடிகர் என்பதை தாண்டி, மிகச் சிறந்த மனித நேயம் கொண்டவர் என்பதாலே எல்லோராலும் பாராட்டப்படுவர்.

நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவுவதிலிருந்து, அரசியல் மற்றும் சமூக அளவில் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏதாவது தீங்கு விளைவிக்கும் திட்டமென்று உணர்ந்தால் கவலைப்படாமல் தனது கருத்தை தெரிவிப்பவருமாகவும் இருப்பவர்.

பொதுவாக திரையுலகம் இக்கட்டானச் சூழல் மற்றும் இந்த கொரோனா பெருந்தொற்றால் மூச்சு விடவே திணறும் போதும் தனக்கான படங்களில் தொடர்ந்து நடித்து வரவே செய்கின்றவர் சூர்யா.

திரைப்படத் திரட்டாக ‍(Anthology) மணிரத்னம் அவர்களின் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவரும் ” கிட்டர் கம்பி மேலே நின்று” என்ற படத்தில் நடிக்கும் வேலையில், பசங்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படத்திலும் நடித்து வருகின்றார்.

படத்தின் பெயருக்கு ஏற்ப சூர்யா எதையும் துணிந்து கேள்வி க‍ேட்கும் தார்மீக பொறுப்புடைய நடிகர் தான். அவரது பிறந்தநாளான்று ஏராளமான நடிகர்கள் மற்றும் துறை சார்ந்த டெக்னீசியன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி, நல்ல சமூக சிந்தனையுடைய சிறந்த குடிமகனாகவும் விளங்கும் சூர்யாவிற்கு தமிழ்சினிமா டுடே பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/