மும்பையில் பிறந்த தமன்னா தனது 16 வயதிலேயே இந்தி படத்தில் அறிமுகமானவர், 2005யில் வெறிவந்த சாந்த் சே ரோசன் செகரா இந்திப்படம் அவருக்கு முதல் படமாக அமைந்தது, அதன் அதே ஆண்டு அவர் தெலுங்கு படமான சீறி என்றப்படத்தில் அறிமுகமானார்.
சீறிக்கு பின்னர் தமன்னா தெலுங்கில் மிகவும் பிஸியாக இருந்தவர், தமிழுக்கு 2007ல் கல்லூரித் திரைப்படம் அறிமுகப்படமாக அமைந்தது, அதன் பின்னர் அவர் பல வெற்றி படங்களாக அமைந்த தமிழ் படங்களான அயன், படிக்காதவன், பையா போன்ற வெற்றிப்படங்களில் நடித்தாலும் அவர் தெலுங்கு திரையுலகில் பிஸியானவராகவே இருந்து வருகின்றார்.

பாகுபலி 1ல் அவந்திகா வேடத்தில் நடித்து தமன்னா உலகப் புகழ் பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். அதேப்போல் சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த தர்மதுரை படத்தில் அவரது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
2005யில் திரையுலகில் நுழைந்த தமன்னா 2020 வரை 67 படங்களில் நடித்திருந்தாலும், இந்த ஆண்டு 2021யில் மட்டும் கை வசம் தன்னிடம் 10 திரைப்படங்களை வைத்துள்ளார், அழகிய தோற்றத்தில் மட்டுமல்ல அருமையான நடிப்பிலும் தமன்னா அசத்தி வருகின்றார் என்றுச் சொல்வதில் எந்த மிகையுமில்லை.
செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்
https://www.tamilcinema.today/