ஐதராபாத் ஏப்ரல் 12 ஐதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம்தான் அண்ணாத்த. கடந்த வருட இறுதியில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு குழுவை சேர்ந்த நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். தற்போது, அடுத்தகட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஐதரபாத்துக்குச் சென்றார் ரஜினி.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியும், இயக்குனர் சிவாவும் பேசிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்