நடிகை சித்ரா 2013 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி உலகில் அடியெடுத்து வைத்துள்ளார், இவர் மக்கள் தொலைக்காட்சியில் ‍தொடங்கி, ஜீ மற்றும் ஜெயா தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் தொடர்களில் நடிக்கக் தொடங்கிய இவர் சரவணன் மீனாட்சி என்ற பிரபலத் தொடரில் சிறிய வேடத்தில் நடித்த இவர் 2018லிருந்து வரும் “பாண்டியன் ஸ்டோர்” தொடரில் நடித்து வந்தார் இதனால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சின்னத்திரை உலகில் உண்டு.

இந்த நிலையில் இன்று 09-12-2020 அதிகாலை சென்னைக்கு அருகிலுள்ள நசேரத்பேட்டையிலிருக்கும் தனியார் அய்ந்து நட்சத்திர ஒட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெகுவிரைவில் ஹேமந் ரவி என்பவருடன் திருமணம் ஆக உள்ள நிலையில் அவரது தற்கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் நடிகர்கள் தற்‍‍கொலை தொடர்ந்த நடந்து வருவதை காண்கின்றோம் இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக தற்கொலை முடிவை எடுப்பது, சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சமூக மற்றும் சுற்றுப்புற அழுத்தங்கள் ஆண் நடிகர்களுக்கு இல்லை என்றேச் சொல்லலாம்.

வெளிநாடுகளில் பொதுவாக பெரும்பாலோர் தங்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் சூழலில் அவர்கள் உளவியல் அறிஞர்களை சந்தித்து அலோசனைகளைப் பெற்று தங்களை புத்துணர்வு செய்து கொள்வார்கள் ஆனால் இங்கே உயர்ந்த படிப்பு மற்றும் சமூக நிலையிலிருந்தாலும் இது போன்ற அறிவுரைகளை பெறுவதில்லை, என்பது துன்பமான ஒன்று தான்.