அக் 03 கோடம்பாக்கம் : சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது, கல்லூரி மாணவர்களின் அன்றாட நிகழ்வுகள், மற்றும் நகைச்சுவையினை தொகுத்து வெளி வந்தாலும் இளைஞர்கள் நடுவே நல்ல வரவேற்பை தேடித்தந்த திரைப்படம் தான் டான்.

டானைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக தோன்றும் படமாகவே ப்ரின்சும் அமையும் என்று தோன்றுகின்றது.

திபாவளியன்று வெளிவரவிருப்பதாகச் சொல்லும் இந்த திரைப்படத்தில் நாயகியாக மரியா ரியாபோஷப்கா, மற்றும் முதன்மையாக கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்களும் ‍தோன்றுகின்றார்.

ஜதி ரத்னலு என்ற தெலுங்கு படத்தினை இயக்கிய அனுதீப் இந்த திரைப்படத்தினை இயக்கியுள்ளார், திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார், தென்னிந்திய மொழிகளில் வெளிவரும் நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படம் வெற்றியடைய தமிழ்சினிமா டுடே வாழ்த்துகிறது.