கோலிவுட் பிப் 17 குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் மனங்களை கொள்ளைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சிக் சொந்தக்காரரான சிவகார்த்திகேயன் பொறியாளர் பட்டயம் பெற்றவர் ஆவார்.

விஜய் ‍தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் ஆவதற்கு முன்பு “கலக்கப்போது யாரு” என்கின்ற நிகழ்ச்சியில் கலந்துக் ‍கொண்டு பிரபலமாகி, அதன் மூலம் தொகுப்பாளராகவும் மாறினார், “அது இது எது” மற்றும் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானார், இவரது தொகுப்பே பல நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் 2012யில் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களால் மெரினாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, கொஞ்சம், கொஞ்சமாக சினிமாவில் தடம் பதித்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, காக்கிச்சட்டை மான் காரத்தே படங்களின் மூலம் தனக்கென திரைத்துறையில் ஒரு இடத்தை பிடித்தார்.

அவரது சொந்த வெளியிடான கனா அவருக்கு மிகுந்த நல்ல பெயரை பெற்றுத்தந்தது, கொரோனாவால் திரையுலகம் துவண்ட நிலையிலும் தன் கைகளில் டாக்டர், டான், வாழ், அயலான் படங்களை வைத்துள்ளார்.

ஒரு பாடலாசிரியராக, பாடகராக, இளைஞர்களின் மனம் கவரும் கதாநாயகனாக வளம் வரும் சிவகார்த்திகேயனை அவரது பிறந்த நாளில் கோலிவுட் டுடே மற்றும் தமிழ் சினிமா டுடே
வாழ்த்தி மகிழ்கின்றது.

செய்தி பிலிம் பாய்