பாடகி சுசித்ரா பல மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் சில பிரபலமான நடிகர்களை பற்றி எழுதியிருந்தார், பின்னர் அவரது குடும்பத்தினர், சுசித்ரா கொஞ்சம் மன அழுத்ததில் இருந்தததால் அது போன்று எழுதினார் என்றும் பின்னர் அவர் மனநல அலோசனைக்கு பின் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் என்றும் கூறினர்.

சுசித்ரா வெளியிட்ட சாத்தான் குளம் காவல் நிலைய கொலை குறித்த காணொளிக்கு பின்பு தான் அந்த நிகழ்ச்சி உலக அரங்கில் தெரிய வந்தது, அதற்கு தமிழக காவல் துறை அவரை அழைத்து அந்த காணொளியை நீக்க கூறியதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் இப்போது விஜய் டிவியில் நடைப் ப‍ெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் கசிந்தன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக கலந்து கொள்ள அவரை கொரோனாவிற்காக ஒரு ஒட்டலில் தனிமைப்படுத்தி இருந்ததாகவும் அப்போது இரவு அவர் தன்னைக் கொலைசெய்யும் திட்டத்துடன் யாரோ கதவை தட்டுவதாகவும் ஒட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார், ஆனால் ஒட்டல் நிர்வாகம் அப்படி ஏதுமில்லை எனக் கூறியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சுசித்ரா மீண்டும் மன அழுத்ததிற்கு ஆளாகி இது போன்று செய்தாரா, என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு வீட்டிற்குள் சிலருடன் பல நாட்கள் தங்கி கழிக்கும் நிகழ்ச்சி என்பதால், அதில் நிறைய மன அழுத்ததிற்கான வாய்ப்புள்ளது, இவர் இப்போதெ இப்படியிருந்தால் மேலும் அவருடைய மனம் பாதிக்க வாய்ப்புள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியானலும், அவர் கொலை மிரட்டல் என்றது பிக்பாஸ் விளம்பரமானல் ஒகே, ஆனால் அவர் மன அழுத்தம் காரணமாக அது போன்று கூறியிருந்தால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்ப்பது அவரது உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது.