சிம்பு தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தாலும் அவருடைய நடிப்பு ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசம், கலைக்கு நேரம் காலம் வைத்து வேலை செய்ய முடியாது என்று தனக்கு தோதான நேரத்திற்குத்தான் வருவார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டு எல்லாத்தளங்களிலும் பரவி, ஒரு நேரத்தில் சிம்புவா? வேண்டாம் என்று ஒடுவதாக பரப்பப்பட்டது, உண்மையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து தான் போனது.

உண்மையில் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டனர், நல்ல திறமையான நடிகர் வாய்ப்புகளிருந்தும் அதனை பயன்படுத்தாமல் உள்ளாரே, எத்தனையோ பேர் வாய்ப்பிற்காக அழையும் போது சிம்புவிற்கு வாய்ப்புகள் அமையும் போது, அதனை சரியாக பயன்படுத்தாமல் தவற விடுகின்றாரே என்று அவரது ரசிகர்களும் வருத்தப்பட்டனர்.

சிம்புவிடம் பெரிய மாற்றமாய் இப்போது சரியான இயக்குநர்கள் சொல்லும் ‍நேரத்திற்கு முன்பே வந்து படபிடிப்பில் கலந்து எந்த வித தாமதமும் இல்லாமல் நடித்து கொடுத்து வருகிறாராம் அதன் விளைவாய் ஈஸ்வரன் படபிடிப்பு முடிந்து திரைக்கு வரும் வேலையில் உள்ளது மாநாடு விரைவாக உருவாகி வருகின்றது, சமத்தாக உணர்ந்து நடித்து வரும் சிம்பு ரொம்ப சமத்தான தனது தங்க‍ை குழந்தை கொஞ்சி தான் சரியான ட்ரக்கில் ஏறியாச்சி இனி எல்லாமே ஹிட் தான் என்கிறார் போல.