தமிழ்சினிமா டுடே சூலை 10 சிம்பு கொ‍ரோனா காலத்திலும் வேகமாக பணியாற்றி இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படம் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்டாலும் படம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

அதன் பிறகு சிம்பு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மாநாட்டு திரைப்பட படபிடிப்பில் மும்பரமாக இறங்கினார், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் இந்த கொரோனா காலத்திலும் தளர்வுகள் ஏற்படும் நேரத்தில் எல்லாம் சிறப்பாக திட்டமிட்டு படபிடிப்பு நடந்து சிறப்பாக வளர்ந்து வந்தது என்றேச் சொல்ல வேண்டும்.

சு‍ரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாட்டின் படபிடிப்புகள் முழுவதுமாக முடிந்த நிலையில் இந்த திரைப்பட படபிடிப்பில் பணியாற்றிய 300 கலைஞர்களுக்கு சிம்பு கைக்கடிகாரம் பரிசளித்து பாராட்டியுள்ளார்.

வெங்கட் பிரபு தனக்கென ஒரு பாணி உள்ளவர், அவரது பலத்திரைப்படங்கள் மசாலா கலந்த வெகுஜன படத்தினை தந்தவர், அவரும் பெரிய இடைவெளிக்குப் பின்னர் இந்த திரைப்படத்தை இயக்குவதால் இந்தப்படம் இருவருக்கும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நம்புவோம்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/