தமிழ் சினிமா: கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர் ரஹ்மான், சிம்பு கூட்டணியில் உருவான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு” ஈஸ்வரனில் மீண்டும் தனது அத்தியாயத்தை தொடங்கி மாநாட்டில் வேகமெடுக்க மின்னல் பாய்ச்சலில் விட்டதை பிடிக்க விரையும் சிம்புவின் நடிப்பில் மற்றோரு வெளீயிடு தான் “வெந்து தணிந்தது காடு”.

சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாகவே அமைந்துள்ளது அந்த வரிசையில் “வெந்து தணிந்தது காடு” படமும் அமையும் என்று சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சித்தி இத்னானி இந்த திரைப்படத்தில் நாயகியாக தோன்றுகின்றார், இந்த திரைப்படத்திற்காக சிம்பு தன்னை ஒரு டீன் ஏஜ் இளைஞனாக உருவம் மற்றும் உடலை மாற்றியுள்ளார்.

கேங்ஸ்டர் படங்கள் தமிழுக்கு புதிதில்லை என்றாலும், கெளதம் வாசுதேவ் மேனன் தனது திரைமொழியில் கூறியுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் சூட்டை குறைத்து இனிமையை கூட்டுவதாகவும் ரசிகர்களின் கருத்து, திறமையான நடிகர் சில காலம் திரைப்படத்தில் ஒதுங்கியோ, ஒதுக்கியோ இருந்தாலும், இனி எல்லாம் சிம்புவிற்கு வெற்றி தான் என்று அவரது ரசிகர்கள் வட்டாரம் கூறுகின்றனர்.

செய்தி: கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/