சினிமா தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அதற்கு ஏற்றமாதிரி கதைக்களமும் மாறிக் கொண்டே தான் உள்ளது.
திரில்லர் கதைகளை எடுத்துக் கொண்டால் அதில் யார் வில்லன்?, யார் அந்தக் கொலையை செய்திருப்பார்? யார் அவளைக் கடத்தியிருப்பார்? போன்ற ஸ்டிரியோ டைப் சப்ஜெக்ட்டில் படம் வந்தால் கொஞ்ச நேரத்தில் எளிதாக ரசிகர்களால் கதையை கெஸ் செய்து விட முடிகின்றது.
சில வருடங்களாக இந்த மாதிரி கதைகளை இயக்குநர்கள் புதிய பாணியில் படத்தை காட்சியமைத்து காட்டுகின்றார்கள், அது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் மிகவும் கவரப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒத்த செருப்பு கதை ரொம்பவும் சிம்பிள் தான் ஆனால் அதைச் சொல்லிய டோன் வேற.
ஒரு வேளை அதை ஒரு நார்மல் படமாக எடுத்திருந்தால், அது ஒரு படமாகவே நமக்கு தெரிந்திருக்காது.
அதே மாதிரி தான் 1917 படமும்.
பல World War based படங்களைப் பார்த்திருப்போம். அதன் கதைகள் எல்லாம் ரொம்பவும் ஆழமாக இருந்திருக்கும், 1917 இன் கதை மிகவும் சாதாரணமான ஒரு கதை.
அதை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிங்கிள் ஷாட் மூவி போன்று காட்சிப்படுத்தியிருப்பாங்க.
அதேப் போலத் தான் “Searching” படமும்
இந்த “Searching” படத்திலே வரும் காட்சிகள் எல்லாமே ஒரு இணையதளத்தில், வீடியோ கால், டீவி நியூஸ் அல்லது சி.சி.டி.வி மூலமாகவோ, வருவதைப் போலத்தான் காட்சி படுத்தியிருப்பார்கள்.
படம் தனியாக ஒரு கேமிராவை வைத்து ஒளிப்பதிவு செய்தாற் போலவே அமைத்திருக்க மாட்டார்கள், படத்தில் வரும் கதாபாத்திரங்களே அனைத்து Visuval களையும் பதிவு செய்து காட்டுவது போல இருக்கும்.
இதை எளிதாக ஒளிப்பதிவு செய்திருந்தாலும், எடிட்டிங்கின் போது ரொம்பவே மெனக்கெட்டு படத்தில் நிறைய விபரங்களைச் சேர்த்து வைத்திருப்பார்கள்.
இதுவரை நான் பார்த்த சினிமாக்களில் இந்த மாதிரியான ஒரு முயற்சி புதிதாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.
நிறைய காட்சிகள் வசனங்கள் இல்லாமல் “Text” கள் பரிமாற்றத்தில் நகரும் அதையெல்லாம் இசைதான் அழகாக நகர்த்திச் செல்லும்.
அண்மையில் பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “CU soon” என்கிற படத்தின் மேக்கிங்கும் இது போலேவேயிருக்கும்.
இப்படி ஒரு புது முயற்சியில் அதுவும் ஒரு திரில்லர் படத்தை எடுத்ததற்காகவே இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
Movie : Searching
Director : aneesh Chaganty