சத்ய ஜோதி பிலிம்ஸ் புகழ்பெற்ற மற்றும் பழைய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும் அது தனது முதல் படமாக மூன்றாம் பிறையை 1982ல் வெளியிட்டது, அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்கள் தயாரித்தாலும் 1998 அரிசந்திரா படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் படங்கள் ஏதும் தயாரிக்கவில்லை பின்னர் 2003ல் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளியான பார்த்திபன் கனவு படத்தினை தயாரித்தது, அது வெற்றிப்படமாகவும் அமைந்தது.
பின்னர் மிகத் தொடர்ச்சியாக இல்லையென்றாலும் படங்களை தயாரிக்கவே செய்தது, இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பட்டாஸ் என்ற படத்தை தயாரித்தது.
ஆண்டின் இறுதியில் ஹிப்பாப் தமிழனை கதாநாயகனாகக் கொண்டு அசுவின் இயக்கத்தில் அன்பறிவு என்ற படத்தினை துவக்கியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் பெரும்பாலும் எல்லோரும் பார்த்து ரசிக்கும் படங்களையே தயாரிக்கும், அந்த வரிசையில் அன்பறிவும் அமையும் என்பதில் சந்தேமில்லை.
செய்தி : டிவிட்டர் திருடன்