ஆக் 27 கோடம்பாக்கம் : சந்தானம் கதாநாயகர்களுடன் நடிக்கும் காமெடி வேடத்தை விட்டு பல வருடங்கள் ஆகின்றது, சந்தானம் நடித்து அண்மையில் வெளி வந்த DD Returns ஒரளவிற்கு நல்ல வெற்றியைத் தந்தது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

சந்தானத்தின் புதிய படமாக “கிக்” திரைப்படம் இப்போது செப்டம்பரில் வெளி வருகின்றது, கிக் திரைப்படத்தினை கன்னட இயக்குநரான பிரஷாந்த் ராஜ் இயக்குகின்றார், இவர் கன்னடத்தில் ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிக் திரைப்படத்தில் சந்தானத்திற்கு இணையாக தான்யா ஹோப் இணைந்துள்ளார், இவர் ஏற்கனவே தாராள பிரபு என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த ‘கிக்’ திரைப்படத்தில் மன்சூர் அலிகான், தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மறைந்த நடிகர் மனோபாலா, ஷகிலா, கூல் சுரேஷ், Y.G.மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘கிக்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி மாதமே வெளி வந்திருந்தது, டி.டி. ரிடர்ன் சந்தானத்திற்கு ஒரு நல்ல ரிடர்னை தந்துள்ள நிலையில், படக்குழுவினர் தணிக்கை மு‍டித்து செப்டம்பர் முதல் நாள் வெளியீட ஆயத்தமாகி வருகின்றனர்.

‘கிக்’ திரைப்படத்தினை பார்ட்சூன் நிறுவனம் வெளியீடுகின்றது, ‘கிக்’ திரைப்படம் நடிகர் சந்தானத்திற்கு மற்றுமொரு வெற்றிப் படமாக அமைய சினிமா.டுடே வாழ்த்துகின்றது.

செய்தி கோலிவுட் பாய்
தமிழ்சினிமா.டுடே