தமிழ்சினிமா டுடே சூலை 09 ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சதா, இவர் மாராத்தியை தாய் மொழியாகக் கொண்ட இவர் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் ந‍டித்துள்ளார்.

ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அன்னியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே போன்ற குறைந்த படங்களில் நடித்தாலும் அவரது பெரும்பாலான படங்கள் பொருளாதாரத்தில் வெற்றிப்படங்ளோகவே அமைந்தன.

தமிழ் திரையுலகில் நல்ல புகழோடும், வாய்ப்போடுமிருந்த சதா திடீரென்று காணாமல் போனார். அப்புறம் விசாரித்ததில் அவர் இந்திப்பட உலகிற்கு போயி விட்டார் என்றனர், ஆனால் சதா இந்தி திரைப்படங்களில் பெரிதாக ‍தோன்றியதாகவோ, வாய்ப்புகள் வந்ததாகவோ செய்திகளில்லை.

அன்மையில் அவர் நடித்து வெளியான டார்ச் ‍லைட் திரைப்படத்தின் கருத்துக்கள் என்னவோ சிறப்பாகயிருந்தாலும் படம் வந்ததும் போனதும் தெரியவில்லை. இப்போது காலம் போன கடைசியில் கால்ஷிட்டோடு காத்திருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை என்பது தான் உண்மை ஜிகிர்தண்டா படத்தில் சங்கிலி முருகன் சொல்வது போல் ஒழுங்காக தமிழில் மட்டும் முயற்சி செய்திருந்தால் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்.

செய்தி தமிழ்சினிமாடுடே நிருபர்.
https://www.tamilcinema.today/