சென்னை என்பது இன்றைய வடசென்னை தான், வட சென்னை மக்களின் வாழ்க்கை பொழுது போக்கு துயரம் குறித்தான படங்கள் எப்போதும் உயிரோட்டமாகவே அமைந்திருக்கிறது.

சென்னை 600028, அட்டைக்கத்தி, மெட்ராஸ், வடசென்னை என்று அடுக்கி கொண்டே போகலாம், வட சென்னை விளையாட்டுகளில் பிரபலம், கேரம், கால்பந்து மற்றும் கபடி.

இதில் ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து ஒட்டி 1980 வரையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்றுதான் குத்துச் சண்டை, அதில் ஏரியாவிற்கு ஒரு பெயரிட்டு விளையாட்டுகள் நடந்து வந்துள்ளன.

காலப் போக்கில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளால் இவை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து வருவது உண்மை,அப்படி ஒழிந்து வரும் விளையாட்டை பின்புலமாக வைத்து வெளிவர இருக்கும் படம் தான் சார்பட்டா பரம்பரை, இதில் நாயகனாக ஆர்யாவும், புதிதாக பா.ரஞ்சித்துடன் பசுபதியும் மற்றும் அவரது அணியின் நடிகர்களாக விளங்கும் கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சினிமாவை வழங்குவதில் பா.ரஞ்சித் தனக்கென ஒரு பாணியை கடை பிடிப்பவர்,கண்டிப்பாக சார்பட்டா பரம்பரை மாஸாக வித்தியாசமான படைப்பாக வருமென்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.