ஆக் 28 கோடம்பாக்கம் : குடும்ப கதைகளை தனக்கென ஒரு பாணியில் படம் எடுப்பதில் வல்லவர் என்று பேசப்படுபவர் இயக்குநர் வசந்த், அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் வாலி மோகன்தாஸ், அவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் ‘ரங்கோலி’.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிராத்தனா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோர்களின் சகோதரியின் மகன் ஆவார்.

ரங்கோலி திரைப்படத்தை கோபுரம் ஸ்டுடியோஸின் கே.பாபுரெட்டி மற்றும் ஜீ.சதீஷ்குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். கே.எஸ்.எஸ்.சுந்திரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இதனை திரைப்பிரபலங்களான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, அருண் விஜய், அதர்வா, ஜீ.வி பிரகாஷ் வாணி போஜன் இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

செய்தி கோலிவுட் பாய்
தமிழ்சினிமா.டுடே