தமிழ்சினிமா டுடே சூலை 20 சென்னை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்பு பெரிய இடைவெளிக்கு பின்னால் ஆண்தேவதையில் நடித்தார், ரம்யா பாண்டியன் ஒரு திறமையான நடிகையாக இருந்தாலும் அவர் தன்னை தமிழ் சினிமாவிற்கு தகுந்தவாறு தன்னை வெளிப்படுத்தாமல் இருந்தார் என்று தான் கூற வேண்டும்.

அண்மை நாட்களாக சமூக ஊடகங்களில் அவரது புகைப்படத் தொகுப்பினை வித்யாசமான தோற்றங்களில் பதிவேற்றி வருகின்றார்.
கண்டிப்பாக இயக்குநர் கண்களில் படும் என்பதில் அய்யமில்லை, மொழி புரிந்த நடிகைகளைக் கொண்டு வேலை செய்யும் போது, உணர்வுகளை இயக்குநர் நினைக்கும் அளவிற்கு பெற முடியும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ரம்யா பாண்டியனின் தொடர் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெற தமிழ்சினிமா குழு வாழ்த்துவோம்,
செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/