தமிழ்சினிமா டுடே சூலை 16. தமிழ் சினிமாவில் ஏன் தமிழ் பெண்களை கதாநாயகிகளாக நடிக்க வைப்பதில்லை என்றால், இயக்குநர்கள் தமிழ் பெண்கள் சினிமாவிற்கு நடிக்க வருவதில்லை ‍என்ற பதிலைச் வழக்கமாகச் சொல்வார்கள்.

ஆனால் தமிழ் பெண்கள் நடிக்க வந்தால், தமிழ் சினிமா உலகம் சரியாக பயன்படுத்துகின்றார்களா? என்றால் 100% இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் பல சிறப்பான நடிகைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

ரம்யா பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பையோ மெடிக்கல் இன்ஜீயரிங் படித்து மேலாளராக பணியாற்றி, அதன் பின் ஆராய்ச்சி பணியாற்றியவர் நல்ல கல்வி தகுதியுடைய இவரின் சித்தப்பா தான் பிரபல நடிகர் அருண்பாண்டியனாவார்.

ரம்யா பாண்டியன்

திரைத் துறை ஆர்வத்தில் மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்தில் நடித்த இவருக்கு ராஜூமுருகனின் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அந்தப்படத்தில் ரம்யா பாண்டியன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், அதன் பின்பு அண்மையில் கொரோனாவால் மறைந்த இயக்குநர் இயக்கிய ஆண்தேவதைப்படத்தில் நடித்தார் அதன் பின்னால் அவருக்குச் சரியான வாய்ப்புகளின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகளை பெரும்பாலான இயக்குநர்கள் அவர் எந்த நடிகருடன் அறிமுகமானார் என்றும் பார்க்கின்றனர், நட்சத்திர நடிகர்களுடன் அறிமுகமானால் அவர்களுக்கு ஒரிரு வாய்ப்புகள் எளிதாக அமைந்து விடுகின்றது.

ஆனால் இந்த அளவீடு கதாநாயகர்களுக்கு இல்லை, எனவே இன்று வரை கதாநாயகிகள் நாயகர்களை வைத்தே நிர்ணயிப்பவர்களாக தமிழ் சினிமாவில் உள்ளனர். எந்த ஒரு கலையும் அந்த மொழி புரிந்தவர்களைக் கொண்டு செய்யும் போது அதன் வெளிப்பாடு உயிரோட்டத்துடன் சிறப்பாக அமையும் என்பது உண்மை.

சிறந்த படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியும் ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா உலகம் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றே, ஆனாலும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து டிவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை தொடர்ந்து ‍வெளிப்படுத்திக் கொண்டு தான் உள்ளார்.

நல்ல இயக்குநர்கள் ரம்யா பாண்டியனுக்கு சரியான வாய்ப்பைத்தந்தால் ரம்யா பாண்டியன் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை, ரம்யா பாண்டியன் திரையுலகில் மின்ன தமிழ்சினிமா டுடேயின் வாழ்த்துக்கள்

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்
https://www.tamilcinema.today/