‍சென்னை தமிழ் சினிமா மே 10 தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்கள் அதிகம் பேர் காணலாம், ஆனால் தமிழ் நடிகைகளை காண்பது அரிது, இல்லை என்று அங்காலாயித்து கொள்ளும் நம்ம ரசிகர்களும் சரி, இயக்குநர்களும் சரி வந்தால் அவர்களுக்கு சரியான வாய்ப்புக்கள் தருவதில்லை அப்படி தந்தாலும் அக்கா..ஆண்டி… அம்மா… என்று பாட்டியாக்கி விடுவார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும் தமிழ் கதாநாயகி நடிகைகள் வரிசையில் 2015 டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன், அதன் பின்னால் வந்த ஜோக்கர் (2016) தமிழ் திரைப்படத்தில் பெரிதும் பேசப்பட்டார், ஆனால் அவருக்கு வாய்ப்பு ஒன்றும் பெரிதாக வரவில்லை, அதன் பின்னர் அவர் 2018யில் வெளி வந்த ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார், இந்த ஆறு ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் மூன்று மட்டுமே, இப்போது இரண்டு படங்கள் படபிடிப்பில் உள்ளதாகச் ச‍ெய்தி.

2019 வாக்கில் அவர் தொலைக்காட்சி பக்கம் திரும்பி, குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி கலந்து வந்து தனது முயற்சியில் தளராமல் தொடர்ந்து வருகின்றார்.

ரம்யா பாண்டியன் பையோ மெடிக்கல் இன்ஜினியரிங் அண்ணா பல்கலைகழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர் என்பதும், ஊமை விழிகள் படத்தில் அறிமுகமாகி எம்.எல்.ஏ வாக தேமுதிகவிலிருந்த அருண்பாண்டியன் இவரது சித்தப்பா என்றும் ‍சொல்கின்றார்கள்.

செய்தி வால் பையன்