அண்ணாத்த திரைப்பட படபிடிப்பிற்காக ரஜினி அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தங்கி படபிடிப்பு நடந்து வந்த செய்தியை கோலிவுட் டுடே ஏற்கனவே தந்திருந்தது.
படபிடிப்புக் குழுவில் சிலருக்கு கொரோனா தொற்றும் அதனால் படபிடிப்பு நிறுத்தமும் செய்யப்பட்டது, இதில் ரஜினி அவர்களுக்கு தொற்றில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அவருடைய இரத்த அழுத்ததில் மாறுபாடு ஏற்ப்பட்டத்தை ஒட்டி அவரை ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இரத்த அழுத்ததில் ஏற்பட்டுள்ள மாறுதலை தவிர வேறு எந்த உடல் தொந்தரவும் அவருக்கு இல்லை என மருத்தவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது, சூப்பர் ஸ்டார் விரைவில் மருத்துமைனையிலிருந்து வெளி வந்து அவரது அரசியல் மற்றும் திரைப்பட வேலைகளைத் தொடர தமிழ் சினிமா டுடே வாழ்த்துகிறது.
செய்தி : குட்டி இளமதி.