தமிழ் சினிமா டுடே சூலை 14, ரஜினி தேர்தலுக்கு முன்பே தன் உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரப்போதில்லை என்பதை அறிவித்திருத்து விட்டார். அவரது முடிவு சரியானது என்று பெரும்பாலோரும், சிலர் அவரது மறுப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினர்.

அண்ணாத்த படபிடிப்பு கொரோனா காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது, தேர்தல் முடிந்தவுடன் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி இந்தியாவை மீண்டும் முடக்கியது. சிறிதளவு தளர்வு ஏற்ப்பட்டவுடன் ரஜினி அவர்கள் தான் நடித்து தரவேண்டிய பகுதிகளை நடித்துக் கொடுத்து விட்டு அமெரிக்கா விரைந்தார்.

அமெரிக்காவில் தனது மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு திரும்பிய உடன் அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசப்போவதாகக் கூறினார். சிலர் 20 ஆண்டுகளாக இப்படித்தான் தனது திரைப்படம் வெளிவரும் முன் ஒரு விளம்பர அரசியல் செய்கின்றார் என்று கூறினர்.

ஆனால் ரஜினி அவர்கள் 12ந்தேதி தனது நிர்வாகிகளிடம் இனி தான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும் எனவே இனி ரஜினி மக்கள் மன்றத்திற்கு வேலையில்லை அதனை கலைத்து விடலாம் என்றும், ரஜினி ரசிகர் மன்றம் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்.

செய்தி தமிழ் சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/