‍தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், அலட்டிக் கொள்ளாத நடிப்பால் அந்த திரைப்படத்தில் வெகுவாக பேசப்பட்டார், பின்னர், இயக்குநர் சூர்யாவுடன் இணைந்து நடித்த மான்ஸ்டரும் நன்றாகவே போனது.

2020யில் அவருக்கு குறைந்தது ஒரு 5 படமாவது வெளிவந்திருக்க வேண்டும், இந்த கோவிட்-19 னால் அந்த வாய்ப்பு தவறிப்போனது, குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை போன்ற 2020யில் வரவேண்டிய படங்கள் வரிசையில் உள்ள போது, இந்தியன் -2 படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

பல கதாநாயகி நடிகைகள் வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில் பிரியா பவானி சங்கர் சத்தமில்லாமல் பிசியாக உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும், பந்தா இல்லாமல் நகரும் அவரது கேரியர் மென்மேலும் வளர கோலிவுட் டுடே வாழ்த்துக்கின்றது.

‍செய்தி : திரைக்கொத்தி