செப் 30 கோடம்பாக்கம் : இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா ப்ரடக்ஷன் வெளியிட்டில் உருவான பொன்னியின் செல்வன் இன்று உலகெங்கும் வெளியீடு. மிகப்பெரும் தமிழ் திரை நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் திரைப்படம் என்றே பொன்னியின் செல்வனைக் கூறலாம்.

கார்த்தி தொடங்கி, ஜெயம் ரவி, விக்ரம், நாசர், பிரபு, பார்த்திபன், திரிஷா, அய்ஸ்வர்யா ராய் சரத்குமார் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எம்.ஜீ.யார் அவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதும் இயக்குநர் மகேந்திரன் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு காரணமாக இருந்தததும் இந்த பொன்னியின் செல்வன் ஒரு காரணம் என்றுச் சொல்லலாம்.

சில வரலாற்று தகவல்களைக் கொண்டு 1948களின் வாக்கில் திராவிட இயக்கங்கள் இலக்கியம் மற்றும் திரையுலகில் கோலோச்சிய நேரத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு வரலாற்று புனைக்கதைகளில் இன்றளவும் புகழப்பட்டு வந்த கதை தான் பொன்னியின் செல்வன்.

இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு வரும் முன் நாடக வடிவில் சிலர் முயன்றுள்ளனர் அதில் நாசர் அவர்கள் நடத்திய நாடகம் வெகுவாகப்பாராட்டப்பட்டது.

பொன்னியின் செல்வனை 1950 களிலிருந்து புத்தக வடிவில் படித்து அவரவர் கற்பனைக்கு தக்க உருவாக்கிய சோழர் காலத்தை மணிரத்னம் உருவாக்கி இருப்பாரா என்று காத்திருந்து பார்ப்போம். பொன்னியின் செல்வன் வெற்றியடைய வாழ்த்தும் தமிழ் சினிமா டுடே.

செய்தி கோலிவுட்பாய்