ஹரிதாஸ் இரண்டு திபாவளியைக் கண்ட படம் என்று பெருமையுடன் பேசுவார்கள், 80களில் வாக்கிலும் 250 நாட்கள், 200 நாட்கள், 125 நாட்கள் என பல படங்களைச் சொல்லலாம், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து 80களின் வாக்கில் வந்த திரிசூலம், அண்ணன் ஒரு கோயில் போன்ற படங்கள் அப்படித்தான் 200 நாட்களை தாண்டி ஒடியவை.
அன்றைய நாட்களில் புது படங்கள் மாவட்டத் தலை நகரங்களில் மட்டும் வெளிவரும், சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அந்த திரைப்படங்கள் வருவதற்கு ஆறு மாதம் ஒரு வருடம் கூட ஆகலாம்.
இப்போது ஒரே நகரத்தில் ஒரு திரைப்படம் ஒன்றுக்கு மேல் திரையிடப்படுவதும், திரைப்பட காம்ளக்ஸில், ஒரே திரைப்படம் 2க்கு மேற்பட்ட திரையருங்களில் திரையிட படுவதால், 100 நாள் கதையெல்லாம் கனவாகிப்போனது.
இன்றையச் சூழலில் ஒரு வாரம் ஒடினால் வெற்றிப்படம், படங்கள் வெளிவருவதற்கே விழா கொண்டாடப்படுகின்றது, இந்தச்சூழலில், காவல்துறை உங்கள் நண்பன் 25 நாட்களை தொட்டு வெற்றிகரமாக ஒடுவதாக அந்த படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.