இயக்குநர் மிஷ்கின், ஆண்ட்டிரியாவை முதன்மையான கதாபாத்திரத்தில் வைத்து, பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகின்றார், அந்தப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எதையும் வேறு ஒரு பார்வையில் அணுகும் மிஷ்கின் இந்த முதல் தோற்றத்தை பழைய கறுப்பு வெள்ளைப்படத் தோற்றத்தில் ஆண்ட்டிரியாவின் பிறந்தநாளான 20 டிசம்பர் அன்று வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா இசையமைப்பார் என்று தெரிகிறது, ஒரு பேட்டியில் இது பிசாசு போன்ற கதையல்ல, ஆனால் தயாரிப்பாளர்கள் பிசாசின் வெற்றியை தொடர்ந்து, இந்தப்படத்தை பிசாசு 2 என்று பெயரிடுவதையே விரும்புகின்றார்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

செய்தி : டிவிட்டர் திருடன்