தமிழ்சினிமா டுடே சூலை 22: சென்னை நடிகர் பசுபதி அவர்கள் கூத்து பட்டறை மாணவராகவும் கூத்து பட்டறையின் நடிகராக 1997 வரை நடித்து வந்தவர், 1999யில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின் நாசர் அவர்களின் மாயன் படத்தில் 2001யில் சிறப்பான ‍தோற்றத்தில் தோன்றி அசத்தியவர். பசுபதி எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் கலக்கியவர்.

விருமாண்டியில் அவர் தோன்றிய வேடமும், அதன் பின் மும்பாய் எக்ஸ்பிரஸில் அவரது வேடமும் வெவ்வேறான கதாபாத்திரங்கள்.

அதேப்போல் இயற்கை, ஈ போன்ற படங்களில் நடிகர் பசுபதியின் நடிப்பு முத்திரை, இதையெல்லாம் தாண்டி இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் ஒரு சிரியசான காமெடியானாக நடித்து அசத்தியிருப்பார் வெயில் அரவான் என்று அவர் வாழ்ந்த கதாபாத்திரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வழக்கம் போல் சார்பட்டாவிலும் ரங்கன் குத்துச்சண்டை வாத்தியராக வாழ்ந்து அசத்தியுள்ளார்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/