இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலையாவது எல்லோரையும் கொஞ்ச காலத்திற்கு முனுமுனுக்க வைத்து விடுவார். அவர் மெல்ல நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

அவருடைய படங்கள் மாஸ்டர் பிளாஸ்டர் என்று இல்லை என்றாலும் தயாரிப்பாளர் கையையோ காலையோ கடிக்க வைத்ததில்லை. நான் தொடங்கி கோடியில் ஒருவன் வரையில் அவருடைய படங்கள் எதுவும் தோல்வி அடைந்தவையல்ல.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன் போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள் தான். அந்த வரிசையில் கோடியில் ஒருவன் திரைப்படத்தையும் சொல்லலாம். கோடியில் ஒருவன் திரைப்படம் வந்து இன்றோடு ஒராண்டுகள் நிறைவடைகிறது.

அதன் பின்னால் அவரது கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் போன்று எட்டு படங்கள் வரிசையாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில், விஜய் ஆண்டனி புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து நடித்த படங்களின் வெளியீட்டிற்காக காத்திருப்பதாகச் செய்தி. எட்டும் வெல்ல நமது வாழ்த்துகள்.

செய்தி கோலிவுட்பாய்.
www.kollywood.today
www.tamilcinema.today