ஆகஸ்ட் 24 கோடம்பாக்கம் : நடிகர் மதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டத் திரைப்படம் நூடுல்ஸ், இத்திரைப்படம் விரைவில் வெளி வரும் சூழலில், திரைப்படத்தின் டிரைலர் நேற்று 23-ஆக-2023 சந்திராயன் 3 நிலவில் இறங்கியன்று வெளியீட்டுள்ளனர்.

நூடுல்ஸ் திரைப்படத்தின் ஒளிப்பதிவினை டி.வினோத் ராஜா எம்.எப்.டி செய்துள்ளார்,
திரைப்படத்தின் எடிட்டிங் பணியினை சரத்குமார் அவர்களும், பின்னனி இசைக் கோர்ப்பை இராபர்ட் சற்குணம் பொறுப்பேற்றுள்ளார்.

நூடுல்ஸ் திரைப்படத்தின் கலைப் பொறுப்பை அனந்தன் எட்வார்ட் கென்னடியும், இ‍சையினை இரமேஷ் கிருஷ்ணனும் செய்துள்ளனர்.

நூடுல்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பு பொறுப்பினை பிரகன அருண் பிரகாஷ் அவர்களும், இணைத் தயாரிப்பினை சுருளி ராஜ் அவர்களும் ஏற்றுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்துள்ளார், அதேப்போல மண்டேலா திரைப்படத்தில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக தோன்றுகின்றார்.

மேலும் இந்த படத்தில் திருநாவுக்கரசு, ஆலியா, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராபர்ட் சற்குணம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதோடு, வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரகாஷ் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். 

செய்தி திரைக் கோமாளி
தமிழ்சினிமா.டுடே