ஆகஸ்ட் 20 கோடம்பாக்கம் அருவி திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் மதன், தனது முதல் படத்திலே தனக்கான இடத்தை பிடித்தவர், நல்ல உயரம் கம்பிரமான தோற்றம் மற்றும் குரல் வளமிருப்பதால் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடிய இளைய நடிகராக வலம் வருகின்றார்.
மதன் அருவி திரைப்படத்திற்கு பின்னர் கர்ணன், துணிவு, அயோத்தி, மாமன்னன், மாவீரன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார், மதன் நடித்த அயலி என்கின்ற வேப் தொடரில் நாயகியின் தந்தையாகத் தோன்றி கலக்கினார், திரைப்படம் குறித்து தெளிந்த பார்வையுடைய மதனின் முதல் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் தான் “நூடுல்ஸ்“.
இந்த திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்துள்ளார், அதேப்போல மண்டேலா திரைப்படத்தில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக தோன்றுகின்றார்.
மேலும் இந்த படத்தில் திருநாவுக்கரசு, ஆலியா, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராபர்ட் சற்குணம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதோடு, வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரகாஷ் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
மதன் இயக்கத்தில் விரைவில் வெளி வரும் நூடுல்ஸ் திரைப்படம் வெற்றியடைய தமிழ்சினிமா.டுடே சார்பில் வாழ்த்துகின்றது.
செய்தி வால் பையன்
தமிழ்சினிமா.டுடே