எது சாமி படம் எது பேய் படம்னே தெரிய மாட்டேங்குது.

ஏன்னா பேய் பண்ற எல்லா விஷயத்தையும் சாமியும் பண்ணுது.

ஒருத்தர் உடம்பிலிருந்து இன்னொருத்தர் உடம்புக்கு போற மாதிரியான காட்சி சாமி படத்திலும் இருக்கு, பேய் படத்திலும் இருக்கு.

அதேமாதிரி, சாமிக்கும் ஒரு உருவம் கொடுத்து ஒரு கதாபாத்திரம் கொடுத்து தான் நடிக்க வைக்கிறார்கள்,

பேய்க்கும் ஒரு உருவம் கொடுத்து ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்.

மற்றபடி அவைகள் காட்டும் மாயாஜாலங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

என்ன ஒரு விஷயத்தை நெகட்டிவா காட்டினா பேய் .

அதே விஷயத்தைப் பாசிட்டிவாகக் காட்டினா அது சாமி ஆகுது.

கிட்டத்தட்ட இந்தப் படமும் அதே மாதிரிதான்.

Avengers படத்துல thanos இந்த உலகத்தில் இருக்க மனுஷங்க எல்லாம் சரியல்ல ,பிரிவினை வந்துருச்சு , population அதிகமாயிடுச்சு அதனால இந்த உலகத்தை அழிக்கப் போறேன்னு சொல்றப்போ அவனை எல்லாருமே வில்லனா பார்த்தோம்.

இப்போ இதே டயலாக்கை தான் இந்தப்படத்துல சாமி சொல்லி அத “நோவா” மூலமா நிறைவேற்றவும் செய்கிறார்.

Atleast

இத குழந்தைகளுக்குப் பிடித்த படம்னு சொல்லலாம்னு பார்த்தா அதையும் குழந்தைகள் ரசிக்கிற விதத்தில் எடுக்காம விட்டுட்டாங்க.

ஒருவேளை Disney இந்தப் படத்தை எடுத்திருந்தா குழந்தைகளுக்கெல்லாம் பிடித்திருக்குமோ என்னவோ.

உங்களுக்கு Fantasy படம் எப்படி எடுத்தாலும் பிடிக்கும்னா இந்தப் படமும் பிடிக்க வாய்ப்பு இருக்கு.

[email protected]

Film name : Noah

Director :Darren aronofsky

Available at :Netflix